தமிழகம் முழுதும் ஒரே இரவில் 870 ரவுடிகள் கைது: போலீசார் அதிரடி
தமிழகம் முழுதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில், ஒரே இரவில் 870 ரவுடிகள் பிடிபட்டனர்.;
தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். இதில் 6,000 ரவுடிகளுடன் சென்னை முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. குற்றங்களின் தன்மைக்கு ஏற்ப ரவுடிகளை, 'ஏ பிளஸ்' மற்றும் 'ஏ,பி,சி' என போலீசார் வகைப்படுத்தி வைத்துள்ளனர்.
சென்னையில் 716 ரவுடிகளை பிடித்து விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் கொலை வழக்கில் ஈடுபட்ட 57 பேர் உட்பட 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 13 பேர் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தலைமறைவாக இருந்தவர்கள். இவர்களிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் 250 கத்தி, அரிவாள் மற்றும் மூன்று துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகம் முழுதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஒரே இரவில் 870 ரவுடிகள் பிடிபட்டனர்.