ஊரடங்கில் வாகன தணிக்கையின் போது 80 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது
சென்னையில் முழு ஊரடங்கு வாகன தணிக்கையின் போது 80 கிலோ தங்க கட்டிகள் சிக்கியது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் காரணமாக கடந்த 6ஆம் தேதி முதல் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு பிறப்பித்தது அதனை தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது.
அதனைத் தொடர்ந்து இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னை பெருநகர் முழுவதும் 312 இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைக்கப்பட்டு 10 ஆயிரம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் சென்னை தி நகர் பேருந்து நிலையம் அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்பினி காரை நிறுத்தி சோதனை செய்தபோது வேனில் தங்கக்கட்டிகள் இருந்தது இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மும்பையில் இருந்து கொரியர் மூலம் 80 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஆம்னி கார் மூலம் தங்கத்தை சென்னை சவுகார் பேட்டையில் உள்ள 30 தனியார் நகை கடைக்களுக்லு எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் ஓட்டுனர் மற்றும் அவருடன் வந்த இரண்டு நபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மாம்பலம் காவல் நிலையத்திற்கு சென்று தங்கம் எந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்கிற உரிய சான்றுகளை காண்பித்துள்ளனர்.
இதையடுத்து உரிய ஆவணங்களும் அனுமதிச் சீட்டும் காண்பித்த பின் போலீசார் தங்கத்தை உரியவர்களிடம் எடுத்து செல்ல அனுமதித்தனர்.
வாகன தணிக்கையின் போது 80 கிலோ தங்கக் கட்டிகளுடன் வந்த வாகனத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது