7 உயர் நீதி மன்ற நீதிபதிகள் திடீர் மாற்றம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட ஏழு நீதிபதிகளை திடீர் மாற்றம் செய்ய இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-11 12:55 GMT

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ( பைல் படம்)

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்பட ஏழு நீதிபதிகளை திடீர் மாற்றம் செய்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய ஜானதிபதி ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் ஆலோசனை நடத்தி இந்திய அரசியலமைப்பு வழங்கிய அதிகாரத்திற்கு உட்பட்டு ஏழு உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி...

1. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சிவஞானம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

2. பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜன் குப்தா, பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

3. இமாச்சல பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்வர் தாகூர், பஞ்சாப்- ஹரியானா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

4. கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி. பஜந்த்ரி, பாட்னா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

5. ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் ஷர்மா பாட்னா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

6. தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி டி. அமர்நாத் கவுடு, திரிபுரா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

7. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் சந்த், ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News