திடீர் ஊரடங்கு..வெளியே செல்ல தடை - தமிழக அரசு அவசர அறிவிப்பு

Update: 2021-04-18 15:06 GMT

நாடு முழுவதும் கொரோனா பரவி வருவது அதிகரித்துள்ளதால் தமிழக முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும் செவ்வாய்கிழமை முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பித்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரடங்குஅமலில் இருக்கும் போது அத்தியாவசிய பணிகள், மருத்துவம், ஊடகம் போன்ற துறையினருக்கு இந்த ஊரடங்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறுஉத்தரவு வரும் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் 20ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதால் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags:    

Similar News