சென்னையில் சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னையில் சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

Update: 2021-10-19 09:15 GMT

சென்னையில் சாலையை கடக்க முயன்ற எஸ்.ஐ மீது கார் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விழுப்புரம் மாவட்டம், கோலிலுார் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா இவர் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள டெக்னிக்கல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணி முடிந்து டி.ஜி.பி அலுவலகம் வெளியே எஸ்.ஐ பிரசன்னா சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று பிரசன்னா மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரசன்னா சுயநினைவின்றி கிடந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள்  அளித்த தகவலின் பேரில்  108 ஆம்புலன்ஸ் மூலம்  அவரை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்துச் சம்பவம் குறித்து காரை ஓட்டி வந்த வடபழனி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News