வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள்
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு;
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், கொரோனா இரண்டாவது அலை நோய் தொற்றின் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் தமிழகத்தில் வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்த வாக்கு எண்ணிக்கைக்கு பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது. அதன்படி 14 மேஜைகள் வைத்து இந்த வாக்கு எண்ணிக்கையானது நடைபெறும். ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்ப இந்த மேஜைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கையானது பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணக்கூடிய அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்கு வரும் முகவர்கள்கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் அல்லது 72 மணி நேரத்திற்குள் RTPCR பரிசோதனை எடுத்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய பணியாளர்களுக்கும் இதே நிலை தான் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் தபால் வாக்கு என்னும் பணி தொடங்கப்படும். அதன் தொடர்ச்சியாக EVMல் பதிவாகியுள்ள வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.