ஸ்டாலின் மகள் வீட்டில் வருமானவரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை: திருமா
திமுக, தலைவர், மக்கள்,மருமகன் வீடுகளில் சோதனை குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.;
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று (ஏப்ரல் 2) காலை, சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை மற்றும் அவரது கணவர் சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், " இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை . திமுக தலைவரின் மகள் வீட்டில் திடீரென வருமானவரித் துறையினர் சோதனை என்பது பாஜக கூட்டணிக்கான தோல்வி பயத்தின் வெளிப்பாடுதான் இந்த வருமான வரி சோதனை. இது ஒரு திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு." என்று விமர்சித்துள்ளார்.