சென்னை மாநில கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

சென்னை மாநில கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

Update: 2021-12-17 16:45 GMT

உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

சென்னை மாநில கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் கலந்துகொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றினை நாட்டார். அப்போது மாணவர்கள் முன்னிலையில் பேசிய அமைச்சர் பொன் முடி கூறியதாவது :

மாணவர்கள் படிப்போடு நிறுத்திவிடாமல் விளையாட்டு, சமூக பணிகளில் ஈடுபடவேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் காலத்திலும் சரி தற்போது நம் முதல்வர் காலத்திலும் சரி பசுமையை பேணுகிறார்கள்.

இங்கு 5000 மாணவர்கள் படிக்கிறீர்கள் ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் இது அழகிய வனமாகும் இதை செய்வீர்களா? என மாணவர்களிடம் அவர் கேள்வி எழுப்பிய போது, மாணவர்களும் செய்வோம் என பதில் அளித்தார்கள்

நீங்கள் நட்ட மரத்திற்கு உங்கள் பெயர் பலகையை வைத்துக்கொள்ளுங்கள் என்றார் எனவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசு தமிழ் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுத்துள்ளது நீங்கள் அனைவரும் தமிழ்மொழியை படிப்பதில் மிகுந்த ஆர்வத்தை மாணவர்கள் செலுத்திட வேண்டும்

நாம் இருமொழிக்கொள்கை கொண்டவர்கள் உலகளாவிய மொழி ஆங்கிலம் நம் மொழி தமிழ் ஆகையால் தமிழ்மொழி கற்று வேலைவாய்ப்பிலும் முன்னுரிமைப்பெறவேண்டும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சமூகப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என கூறினார் மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது அதற்கான குழு அமைக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.

Tags:    

Similar News