மகாவிஷ்ணு நிபந்தனையற்ற மன்னிப்பு..! ஜாமீன் கிடைக்கும் போல..!

முற்பிறவியில் செய்த பாவங்களால்தான் இந்தப்பிறவியில் பலர் நோயாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள் என்று மகாவிஷ்ணு பேசியதற்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.;

Update: 2024-09-27 11:23 GMT

மகாவிஷ்ணு (கோப்பு படம்)

ஆசிரியர் தினத்தன்று அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு உரையாற்றினார். அவரது பேச்சில் சாதி, வர்க்க பேதம் மற்றும் "முற்பிறவி பாவங்கள்" பற்றிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

"முற் பிறவியில் செய்த செயல்களின் அடிப்படையிலேயே இந்த பிறவியில் ஒருவர் ஏழையாகவோ அல்லது நோயாளியாகவோ பிறக்கிறார்" என்று அவர் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த்தனர். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அவரது பேச்சினைக் கண்டித்து போராட்டங்கள் செய்தனர்.

சமூக ஊடங்களில் வைரல்

மகாவிஷ்ணுவின் கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வைரலானதும்,தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பல அரசியல் தலைவர்களும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

மகாவிஷ்ணுவின் மன்னிப்பு

சர்ச்சை வெடித்த சில நாட்களுக்குப் பிறகு, மகாவிஷ்ணு தனது சமூக ஊடக பக்கத்தில் மன்னிப்பு கோரினார். "என் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

சட்ட நடவடிக்கைகள்

மன்னிப்பு கோரியபோதிலும், சென்னை காவல்துறை மகாவிஷ்ணுவை கைது செய்தது. BNSS பிரிவுகள் 192, 196 (1) (a), 352, 353 (2) மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016, பிரிவு 92 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'எனது பேச்சு மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தியிருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக மகா விஷ்ணு தெரிவித்துள்ளார். அவ்வாறு அவர் மன்னிப்பு கேட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைதாகியுள்ள மகாவிஷ்ணு ஜாமீன் கோரிய மனு மீது காவல்துறை பதிலளிக்க வேண்டுமாய் சென்னை முதன்மை முதலாவது கூடுதல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags:    

Similar News