சைதாப்பேட்டையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
சைதாப்பேட்டையில் 14 வகை மளிகை பொருட்களுடன், கொரோனா நிவாரண உதவி தொகை ரூ 2000 வழங்குவதையும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.;
சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள ரேசன் கடையில் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மளிகை பொருட்களுடன் கொரோனா நிவாரண நிதியும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.