மும்பையில் இருந்து ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது
தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையிலிருந்து ஏா்இந்தியா விமானத்தில் சென்னை வந்து சோ்ந்தது.;
தமிழகத்தில் கொரோனா வைரஸ்சை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதை தமிழக முதலமைச்சா் திருப்பூரில் முறைப்படி தொடங்கி வைத்துள்ளாா். ஆனால் மத்திய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகள் முழுமையாக வரவில்லை.
இதையடுத்து தமிழக அரசு தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குங்கள் என்று மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை விடுத்தது. அதோடு தமிழக அரசே நேரடியாக தடுப்பூசிகளை வாங்கவும் முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் தமிழகத்திற்கு தடுப்பூசிகளை அனுப்புகிறது.
இந்நிலையில் மும்பையிலிருந்து ஒரு லட்சம் கோவிசீல்டு தடுப்பூசிகள் ஏா்இந்தியா விமானத்தில் சென்னை வந்துள்ளது.9 பாா்சல்களில் வந்த அந்த தடுப்பூசி மருந்துகளை சென்னை விமானநிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறையினா் பெற்றுக்கொண்டு,சென்னை டிஎம்எஸ்சில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு எடுத்து சென்றனா். அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.
அதோடு மேலும் தடுப்பூசிகள், மருத்துவ உபகரணங்கள் தொடா்ச்சியாக அடுத்த சில நாட்களில் விமானங்களில் சென்னை வரவிருப்பதாக விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.