'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருது- தமிழக முதல்வர் அறிவிப்பு
'தகைசால் தமிழர்' என்ற பெயரில் இந்த ஆண்டு புதிய விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான், உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழக முதல்வர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் "தகைசால் தமிழர்" விருது பெறும் விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச்சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது முதல்வர் வழங்கி கௌரவிப்பார்.