டெல்லியில் இருந்து விமானங்களில் சென்னைக்கு வந்தது மருத்துவ உபகரணங்கள்
டெல்லியிலிருந்து விமானப்படை விமானங்களில் ஆக்ஜிசன் தயாரிக்கும் கருவிகள், வெண்டிலேட்டா்கள் முககவசங்கள் என மருத்துவ உபகரணங்கள் சென்னை வந்திறங்கின.
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. தளா்வுகளற்ற முழு ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதோடு தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஆக்ஜிசன்,வெண்டிலேட்டா்மற்றும் மருத்துவ உபகரணங்களை வெளிநாடுகளிலிலுருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் தமிழகத்திற்கு பெருமளவு வரவழைத்து வருகிறது.
அந்த வகையில் டெல்லியிலிருந்து 2 இந்திய விமானப்படை விமானங்கள் 3 டன் மருத்துவ உபகரணங்களுடன் சென்னை பழைய விமானநிலையம் வந்தன.இரு விமானங்களிலும் 68 ஆக்ஜிசன் உற்பத்தி கருவிகள், 45 வெண்டிலேட்டா்கள், 2 லட்சம் முகக்கவசங்கள், ஒரு லட்சம் கொரோனா பரிசோதனை ஆர்.டி. பிசிஆர் கிட்ஸ் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்திறங்கின.
அதன்பின்பு விமானப்படை வீரா்கள் கண்காணிப்பில், இந்தியன் ஏா்லைன்ஸ் லோடா்கள் மருத்துவ உபகரணங்களை இறக்கி சென்னை விமானநிலைய அதிகாரிகளிடம் கொடுத்தனா்.அவா்கள் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். அதன்பின்பு தமிழக அரசு அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றி சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அடுத்த சில தினங்களில் மேலும் சில விமானங்களில் டெல்லி, நாக்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்கள் பெருமளவு தமிழகம் வரவிருப்பதாக சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.