மதுக்கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்றவர் கைது. 200 ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல்
சென்னை கிண்டி பகுதியில் டாஸ்மாக்கடையில் 200 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயன்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்;
மதுக்கடையில் கள்ள நோட்டை புழகத்தில் விட முயன்ற நபரை கைது செய்து அவரிடமிருந்த 200 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சென்னை கிண்டி, மடுவின்கரையில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த நபர் ஒருவர் இரண்டு 200 ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து மது வாங்க முயன்றுள்ளார். மதுக்கடைக்காரர் அந்த பணம் இரண்டும் கள்ள நோட்டு என்பதை அறிந்து கிண்டி போலீஸாரை வரவழைத்து அவரை பிடித்து கொடுத்தார். அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் திருவல்லிக்கேணியை சேர்ந்த அஜாஸ்(37) என்பது தெரியவந்தது. அவரை அழைத்துக் கொண்டு கிண்டி போலீஸார் மேலும் ஏதேனும் கள்ள நோட்டு இருக்கிறதா என சோதனை நடத்துவதற்காக அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றனர். இவருக்கு கள்ளநோட்டு எப்படி கிடைத்தது எனவும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.