குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.23 லட்சம் மதிப்புடைய அரை கிலோ தங்கம்!

சென்னை விமானநிலைய குப்பைத்தொட்டியில் கிடந்த ரூ.23 லட்சம் மதிப்புடைய அரை கிலோ தங்கப்பசை பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-02-14 07:15 GMT

கைப்பற்றப்பட்ட தங்கம்

சென்னை விமான நிலைய தூய்மை பணியாளர்கள், சர்வதேச விமான நிலைய பயணிகள் வருகைப்பகுதியை  சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனா். அங்கு சுங்கச் சோதனை பிரிவிற்கு வெளிப்பகுதில்,  ஒரு குப்பைத் தொட்டியை சுத்தம் செய்த போது, அதனுள் ஒரு பார்சல் மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

உடனடியாக தூய்மைப் பணியாளா்கள் சுத்தப்படுத்தும் பணியை நிறுத்திவிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார். பாதுகாப்பு அதிகாரிகள் வந்து,  தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு, அந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அதனுள் பாலிதீன் கவரில் தங்கப்பசை மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த பாா்சலில் சுமாா் அரை கிலோ (500 கிராம்) எடையுள்ள தங்கப்பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு, ரூ. 23 லட்சம். இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த தங்கப்பசையை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துபாயில் இருந்து இலங்கை போன்ற வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கப்பசையாக இருக்கலாம். சென்னை விமான நிலையத்தில் சுங்கச்சோதனை கடுமையாக இருந்ததால், கடத்தல் ஆசாமி கும்பை தொட்டியில் தங்கத்தை மறைத்து வைத்து விட்டு தப்பியிருக்கலாம் என்று சுங்கத்துறையினா் கூறுகின்றனா். இதையடுத்து குப்பைத்தொட்டி இருந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தங்கம் கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News