சென்னை, புறநகர் வீடுகளில் 82 பாம்புகளை வனத்துறையினர் பிடிப்பு

கனமழை ஒயந்ததும் சென்னை மற்றும் புறநகரில் வீடுகளில் புகுந்த 82 பாம்புகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

Update: 2021-11-13 18:30 GMT

சென்னையில் பிடிபட்ட பாம்புகள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் குடியிருப்புகளில் பாம்புகள் புகுந்து விட்டதாக கிண்டியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு தகவல்கள் வந்தன.

இதையடுத்து கிண்டி சரகர் தனசேகரன் தலைமையில் பாம்புகளை பிடிக்க 30 பேர் குழு அமைக்கப்பட்டது. கடந்த 2 தினங்களாக வேளச்சேரி, பள்ளிக்கர்ணை, சிட்லபாக்கம், வளசரவாக்கம், விருகம்பாக்கம் உள்பட 145 இடங்களில் இருந்து பாம்பு பிடிக்குமாறு தகவல் தந்தனர். வன பாம்பு பிடிக்கும் ஊழியர்கள் சென்று   25 சாரப்பாம்பு, 8 மண்ணுளிப்பாம்பு, 20 நல்லபாம்பு, 20 தண்ணீர்பாம்பு, 9 கொம்பேரிமூக்கன் என 82 பாம்புகள் பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்புகள் மாம்பாக்கம், செங்கல்பட்டு, திருப்போரூர், அச்சரப்பாக்கம் ஆகிய வனப் பகுதிகளில் விடப்பட்டன. குடியிருப்பில் பாம்பு இருந்தால் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News