ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு: அமைச்சா் சுப்பிரமணியன் விளக்கம்
செங்கல்பட்டு, வேலூா், சென்னை அரசு மருத்துவமனைகளில் 19 பேர் உயிரிழந்ததற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமில்லை என்று அமைச்சா் சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்;
அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவா் கூட உயிரிழக்கவில்லை என்று நான் சொன்னது உண்மை தான். ஆனால், நான் சொன்னது திமுக அரசு பொறுப்பேற்றப்பின் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு இல்லை என்றுதான்.
தமிழக முதல்வா் ஸ்டாலின் கடந்த மே 7 தேதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 பேர் உயிரிழந்துள்ளனா் என்று தெரிவித்தார். அந்த சம்பவம் மே 4 தேதி இரவு நடந்தது.அப்போது, அதிமுகவின் ஆட்சிதான் இருந்தது.
அதே அதிமுக ஆட்சியில் தான் கடந்த ஏப்ரல் 6 தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2 பேரும், 19 தேதி வேலூா் அரசு மருத்துவமனையில் 4 பேரும் இறந்தனர். இந்த இறப்புகள் எல்லாம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நடைபெறவில்லை. ஆக்சிஜன் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளால் இறப்பு ஏற்பட்டது.
இந்த மூன்று சம்பவமும் அதிமுக ஆட்சியில் தான் நடைபெற்றது. திமுக ஆட்சியில் நடைபெறவில்லை என்று இவ்வாறு குறிப்பிட்டார்.