பட்டாசு தொழிற்சாலை விபத்தை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு: அமைச்சர் சி.வி.கணேசன்!
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க கலெக்டர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.;
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் பணித்திறன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை செயலாளர் கிர்லோஷ்குமார், இயக்குனர் செந்தில்குமார், இயக்குனர் சிறப்பு பணி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.கணேசன், பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் தொடர் விபத்துக்களை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வரின் நோக்கமான, தமிழகத்தில் குழந்தை தொழிலாளர் முறையே இல்லை என்பதை மெய்யாக்க தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.