சென்னை - கன்னியாகுமரி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சைக்கிள் பேரணி

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை காங்கிரஸ் கட்சி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி செல்கிறது. பேரணியை செல்வ பெருந்தகை தொடங்கிவைத்தார்.

Update: 2021-07-14 17:04 GMT

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்தும் சைக்கிள் பேரணியை சட்டமன்ற கட்சி தலைவர் செல்வ பெருந்தகை தொடங்கிவைத்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை தலைவர் மகாத்மா ஸ்ரீ நிவாசன் தலைமையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை முதல் கன்னியகுமரி வரை 900 கி.மீ மாபெரும் சைக்கிள் பேரணி தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தப்படுகிறது.

 இந்த பேரணியை  மகாத்மா சீனிவாசன் தலைமையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச்செயலாளர் செல்வம்,  மத்திய மாவட்ட தலைவர் முத்தழகன், நடிகை ஷகிலா ஆகியோர் பங்கேற்றனர்

இதில் குறிப்பாக இளைஞர்கள், பெண்கள், ஆண்கள் என மொத்தம் 56 பேர் பங்கேற்றுள்ளனர் இப்பேரணி ஆனது இன்று தொடங்கி மொத்தம் பதினோரு நாட்கள் நடைபெற்றுகிறது.  24 ம்தேதி குமரி காந்தி மண்டபத்தில் முடிய உள்ளது


Tags:    

Similar News