காலி பணியிடங்களை நிரப்ப செவிலியர் உதவியாளர் நலக்குழு அமைச்சரிடம் மனு!
தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணயித்திடம் செவிலியர்கள் நலக்குழு மனு அளித்துள்ளது.
தமிழ்நாடு செவிலியர் உதவியாளர் நலக்குழு சார்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் அளித்துள்ள மனுவில், தமிழக சுகாதாரத்துறையில் காலியாக உள்ள DME,DMS,DPH ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் செவிலியர் உதவியாளர் பணியிடங்கள் பல வருடங்களாக நிரப்ப படாமல் காலியாக உள்ளது.
முன்னதாக 2009 -2010 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியால் இப்படிப்பு தொடங்கப்பட்டு 2011 ஆம் ஆண்டில் பணி ஆணைகளையும் வழங்கினார். ஆனால் அதன் பின்னர் வந்த ஆட்சியாளர்கள் இதுகுறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
பின்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை 02.12.2019 அன்று சந்தித்து மனு அளித்தோம். ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். ஆகவே நாங்கள் அனைவரும் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் முறையாக பயிற்சி பெற்ற ஆண்கள் பெண்கள் என 7000 பேருக்கு மேல் உள்ளோம். தங்கள் தலைமையின் கீழ் பணியாற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.