சென்னையில் மாஸ்க் இல்லாமல் சுற்றி திரிந்த 15919 பேர் மீது வழக்கு

சென்னையில் முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 15 ஆயிரத்து, 919 பேர் மீது வழக்கு பதிந்து, 31 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்;

Update: 2021-09-26 03:58 GMT

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முக கவசம் அணிவது கட்டாயம். மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு எச்சரித்துள்ளது. இருப்பினும் பலரும் அலட்சியம் காட்டுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து சிறப்பு படையை உருவாக்கியது.

இப்படையினர், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர். சென்னை மாநகராட்சி மற்றும் போலீஸ் எல்லையில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளிலும் சோதனையில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், செப்., 16 முதல் 24 வரையில், ஒன்பது நாட்கள் நடத்திய சோதனையின் போது, முக கவசம் அணியாமல் ஊர் சுற்றிய, 15 ஆயிரத்து, 919 பேர் மீது வழக்கு பதிந்து, அவர்களிடம் இருந்து 31.83 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Tags:    

Similar News