சென்னை விமான நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு
சென்னை விமான நிலையத்தில் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பெண்களின் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. அக்டோபர் 1ம் தேதி முதல் விழிப்புணர்வு நிக்ழ்ச்சி நடைபெற்று வருகின்றன. இறுதி நாளான இன்று பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது.
இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், விமான நிலைய இயக்குனர் சரத்குமார், நக்கீரன் கோபால் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், விமான நிலையத்தில் பெண்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சி முலம் பலபெண்களுக்கு பயன் பெற்று இருக்கும். தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் அரசு மருத்துவமனைகளில் பெண்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடந்தது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரசு மட்டுமே செய்ய முடியாது. தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் இதில் இணைய வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் இருந்து கிராமபுறங்களுக்கு சென்று தொடக்க நிலையிலேயே மருத்துவ சேவை பெற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.