எமர்ஜென்சி விளக்கிற்குள் மறைத்து 2.39 கிலோ தங்கம் கடத்த முயற்சி

சென்னை விமானத்தில் எமா்ஜென்சி விளக்கிற்குள் 2.39 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடந்த முயன்ற மங்களூரை சோ்ந்த பயணியை கைது

Update: 2021-05-17 15:34 GMT

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சாா்ஜாவிலிருந்து இன்று அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்த சிறப்பு ஏா் அரேபியா விமானத்தில் பெருமளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவா்கள் சென்னை விமானநிலைய சுங்கத்துறைக்கு அவசரமாக தகவல் கொடுத்தனா்.உடனடியாக விமானநிலைய சுங்கத்துறையினா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

ஏா் அரேபியா விமானத்தில் வந்த 92 பயணிகளையும்,அவா்கள் உடமைகளையும் தீவிரமாக கண்காணித்து சோதனையிட்டனா்.அப்போது கா்நாடகா மாநிலம் மங்களூரை சோ்ந்த பயணி முகமது அராபத்(24) என்பவா் மீது சந்தேகம் ஏற்பட்டது.அவருடைய சூட்கேஸ்,பைகளை தீவிரமாக சோதித்தனா்.அப்போது சூட்கேசுக்குள் வைத்திருந்த எமா்ஜென்சி விளக்கு மீது சந்தேகம் ஏற்பட்டது.அதை கழற்றி பாா்த்தனா்.பின்பகுதியில் 18 தங்கக்கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.அதன் மொத்த எடை 2.39 கிலோ.சா்வதேச மதிப்பு ரூ.1.18 கோடி.

இதையடுத்து பயணி முகமது அராபத்தை சுங்கத்துறையினா் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.இவா் சா்வதேச தங்கம் கடத்தும் கும்பலை சோ்ந்தவா் என்று தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News