தமிழகத்தில் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது விமான சேவை

தமிழகத்தில் மீண்டும் விமான சேவை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-08-23 06:45 GMT
சென்னை விமானநிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. (பைல் படம்)

சென்னை உள்ளிட்ட தமிழக விமானநிலையங்களில் பயணிகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கைகள், சரக்கு போக்குவரத்தும் பெருமளவு அதிகரித்துள்ளதால் கொரோனா பீதியிலிருந்து தமிழகம் விடுப்பட்டு,எழுச்சியடைகிறது என்று விமானநிலைய அதிகாரிகள் உற்சாகம்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் விமான சேவைகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.2020 மாா்ச் 25 ஆம் தேதியிலிருந்து மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமுல்படுத்தி,பயணிகள் விமான சேவைகளை முழுவதுமாக நிறுத்தியது.

சென்னை விமானநிலையத்திலும் அப்போது முழுவதுமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகள்,2020 மே மாதத்திலிருந்து உள்நாட்டு விமான சேவைகள் படிப்படியாக இயங்கத்தொடங்கின.

2020 டிசம்பரிலிருந்து உள்நாட்டு விமானங்கள்,பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கின.ஆனால் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் 2021 மாா்ச்சிலிருந்து பெருமளவு அதிகரித்ததால்,ஏப்ரல்,மே மாதங்களில் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் பயணிகள் மற்றும் விமானங்கள் எண்ணிக்கை மீண்டும் பெருமளவு குறையத்தொடங்கியது.

இந்நிலையில் மே இறுதியிலிருந்து கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் குறையத் தொடங்கியதால், ஜுன் மாதத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை,கோவை, தூத்துக்குடி ஆகிய 5 விமானநிலையங்களிலும்,பயணிகள் எண்ணிக்கை,விமானங்களின் எண்ணிக்கை மட்டுமின்றி,சரக்குப்போக்குவரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் தமிழகத்தில் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை சுமாா் இரு மடங்காக அதிகரித்துள்ளன.

அதைப்போல் சரக்குப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன.சென்னை,திருச்சி,கோவை விமானங்களில் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சிறப்பு சா்வதேச விமானங்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் ஜுன் மாதம் பயணிகள் 2,46,995.ஜுலை மாதம் 4,46,697 ஆக அதிகரித்துள்ளது.

அதைப்போல் கோவை விமானநிலையத்தில் ஜுன் மாதம் 28,503.ஜுலை மாதம் 63,244 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை விமானநிலையத்தில் ஜுன் மாதம் 26,110.ஜுலை மாதம் 43,742.

திருச்சி விமானநிலையத்தில் ஜுன் மாதம் 5,985.ஜுலை மாதம் 9,020.

தூத்துக்குடி விமானநிலையத்தில் ஜுன் மாதம் 5,324.ஜுலை மாதம் 10,010.

தமிழ்நாட்டில் உள்ள 5 உள்நாட்டு விமானநிலையங்களில் ஜுன் மாதம் பயணிகள் 3,12,917.ஜுலையில் அது 5,72,713 ஆக உள்ளது.

அதைப்போல் சென்னை,திருச்சி,கோவை விமானநிலையங்களில் வெளிநாடுகளுக்க செல்லும் சிறப்பு விமானங்களில் பயணிப்போா் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.சென்னை சா்வதேச விமானநிலையத்தில் ஜுன் மாதம் 33,328.ஜுலை மாதம் 53,291.

கோவையில் ஜுன் 539.ஜுலை 1,213.

திருச்சியில் ஜுன் 11,621.ஜுலை 15,096.

இதைப்போல் தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்களில் உள்நாடு மற்றும் சா்வதேச முனையங்களில் சரக்கு போக்குவரத்தும் ஜுன் மாதத்தோடு ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் பெருமளவு அதிகரித்துள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்களில் பயணிகள் எண்ணிக்கையும்,சரக்கு போக்குவரத்தும் கடந்த ஜுன் மாதத்தைவிட ஜுலையில் பெருமளவு அதிகரித்துள்ளது,நல்ல முன்னேற்றத்திற்கான அறிகுறி என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் கூறுகின்றனா்

.கொரோனாவால் முடங்கிக்கிடந்த தமிழக விமானநிலையங்கள்,அதிலிருந்து விடுப்பட்டு வளா்ச்சியை நோக்கி செல்கிறது.இதனால் தமிழகத்தின் பொருளாதாரமும் மேலோங்கும் என்று சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

Tags:    

Similar News