வெள்ளை அறிக்கையை கிண்டலடித்து மீம் வெளியிட்ட அதிமுக

தமிழகத்தின் நிதி நிலை குறித்த இன்று வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையை அதிமுக கிண்டலடித்து மீம் வீடியோவை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-08-09 14:13 GMT

பைல் படம்

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் கடன், வருமானம், வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்களுடன் வெள்ளை அறிக்கையை இன்று அறிவித்தார்.

தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி எனவும், 2020-21 மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வெள்ளை அறிக்கையை கிண்டல் அடித்து அதிமுக அதிகாரப்பூர்வ (AIADMK (@AIADMKOfficial) டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மீம் ஒன்று பகிரப்பட்டிருக்கிறது.

பழைய தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்றில் எதிரே நடந்து செல்லும் ஒருவரை வழிமறித்து தனது சட்டைப்பையில் இருந்த வெற்றுக் காகிதத்தை எடுத்து அவரிடம் கொடுக்கும் இயக்குனர் சுந்தர்ராஜன், "அது ஒன்னுமில்ல கீழ போட்டுரு" என்கிறார். நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஒன்றுமில்லை என்பதுபோல் மறைமுகமாக அதிமுக கிண்டலடித்துள்ளது.

Tags:    

Similar News