பிரபல நடிகர் ரகுமானின் தாயார் காலமானார்
நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
சென்னை :
நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளவர் நடிகர் ரகுமான்.
இந்நிலையில் நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். இவருக்கு வயது 84. இவரது இறுதிச்சடங்கு கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூரில் இன்று நடைபெறுகிறது.