தமிழகத்தில் நாளை 5000 மெகா மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாளை தமிழகத்தில் 5000 மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-12 17:52 GMT

தேனாம்பேட்டை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்ககத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். 

தேனாம்பேட்டை, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு இயக்ககத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் 6115 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு நேற்று மட்டும் 2,43,139 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். நாளை தமிழகத்தில் 5000 மெகா மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் சென்னையில் மட்டுமே 750 மருத்துவ முகாம்கள் நடைபெறும். 

மழை கால நோய்த்தடுப்பு நடவடிக்கையாக நடத்தப்படும் இம்முகாம்களில் காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறிகள் இருந்தாலும் பங்கேற்று சிகிச்சை பெறலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை 50,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் கோவை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50 மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை 9150 ஆக உயர்ந்துள்ளது. 493 பேர் டெங்குவுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மழை நீரில் டெங்கு கொசுக்களின் முட்டைகள் அடித்துச் செல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால் வரும் நாட்களில் டெங்கு பாதிப்பு குறையும் என எதிர்பார்க்கிறோம் " என்றார்.

டெங்கு பாதிப்பு குறித்து மத்திய குழு பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினர் மருந்துகள் இருப்பு சிகிச்சை அளிக்கும் முறை குறித்து கேட்டறிந்தனர் தமிழக அரசு டெங்கு தடுப்பு விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளனர்

இல்லம் தேடி மருத்துவம் மூலமாக முப்பத்தி ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். அதேபோல் இல்லம் தேடி தடுப்பூசி என்ற திட்டம் ஒரு வார காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது மழைக்காலம் என்பதால் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியை சுகாதாரப் பணியாளர்கள் செய்து வருகின்றனர் இதுவும் மக்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News