புனேவில் இருந்து 2.23 லட்சம் டோஸ் கோவிட்ஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது

புனேவில் இருந்து 2 லட்சத்து 23 ஆயிரத்து 60 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தது.

Update: 2021-05-23 01:37 GMT

சென்னைக்கு வந்த கோவிஷீல்டு தடுப்பூசிகளை இறக்கும் பணியில் தொழிலாளர்கள்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவீஷீல்டு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் புனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 640 கிலோ எடையில் 2 லட்சத்து 23. அயராது 60 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

தடுப்பூசி மருந்துகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்க்கு கொண்டு செல்ல படுகிறது

Tags:    

Similar News