சென்னை சைதாபேட்டையில் சிலம்பம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

சென்னை சைதாபேட்டை அதிமுக வேட்பாளராக முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிடுகிறார். வாக்கு சேகரிக்க வந்த அவர் சிறுவர்களுடன் சிலம்பம் ஆடி பிரசாரம் செய்தார்.

Update: 2021-03-25 19:30 GMT

சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக வேட்பாளராக முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிடுகிறார். சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரில் சைதை துரைசாமி மாலை பிரசாரம் செய்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த சிறுமிகள் சிலம்பம் ஆடி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

அப்போது திடீரென ஒரு சிறுமியிடம் இருந்து கம்பை வாங்கி சைதை துரைசாமி சிலம்பம் சுற்றத் தொடங்கினார். மேலும் ஒரு சிறுமியுடன் சிலம்ப சண்டையிலும் ஈடுபட்டார். இதனை பார்த்த அப்பகுதியினர் ஆரவாரத்தில் கைதட்டி மகிழ்ந்தனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது 'கொரோனா காலம் என்பதால் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள்' என வேண்டுகோளும் விடுத்தார்.



Tags:    

Similar News