திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் குடும்பதுக்கு ரூ 1 கோடி: முதலமைச்சர் வழங்கல்
ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட திருச்சி சப்-இன்ஸ்பெக்டர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ 1 கோடியை வழங்கினார்.
*ஆடு திருடர்களால் படுகொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு எஸ் எஸ் ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு முதல்வர் ஒரு கோடி ரூபாய்க்கான நிதி உதவியை வழங்கினார்*
கடந்த 20ஆம் தேதி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணியில் ஆடு திருடர்களை பிடித்தபோது, தாக்கப்பட்டு உயிரிழந்த திருச்சி நவல்பட்டு காவல்நிலைய எஸ்எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்தாருக்கு ஒரு கோடி நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் பூமிநாதனின் குடும்பத்தினர் மனைவி கவிதா மற்றும் மகன் குகன்பிரசாத் இன்று தலைமைசெயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பெற்றுக் கொண்டனர்
செய்தியாளர்களை சந்தித்து பேசிய நவல்பட்டு காவல்நிலைய எஸ்ஐ பூமிநாதனின் மகன் குகன்பிரசாத் கூறியதாவது.
தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்ததாக கூறியவர்கள் அப்போது முதல்வர் அறிவித்தபடி ஒரு கோடிக்கான காசோலையை வழங்கியதாக தெரிவித்தார் மேலும் மேலும் பணி நியமனத்திற்கான ஆணை விரைவில் வழங்கப்படுமென தெரிவித்ததாக தெரிவித்தார்.