ராயபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு, 3 பேர் கைது

ராயபுரத்தில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.;

Update: 2021-07-07 03:57 GMT

சென்னை ராயபுரத்தில் டூவீலர் திருடர்கள் 3 பேரை போலீஸ்சார் கைது செய்தனர்.

சென்னை ராயபுரத்தில் உள்ள ரங்கப் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலின் அருகே நிறுத்தியுள்ளார். வீட்டில் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது இவருடைய இருசக்கர வாகனம் காணவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்கை பதிவு செய்த ராயபுரம் காவல்துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 3 பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர். திருடிச் சென்ற இருசக்கர வாகனத்தை சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அங்கிருந்து வாகனத்தை பறிமுதல் செய்த உரிமையாளரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். மேலும் கைது செய்யப்பட்ட கார்த்திகேயன் கிஷோர் மற்றும் ஐயப்பன் இவர்கள் மீது வேறு ஏதேனும் குற்ற சம்பவங்கள் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News