கொரோனா மூன்றாவது அலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது குறித்து யோசிக்க முடியாது,அமைச்சர் மா.சுப்ரமணியன்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படும் என்ற அச்சுறுத்தல் உள்ள நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை தற்போதைக்கு மூடுவது குறித்து யோசிக்க முடியாது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.;

Update: 2021-07-08 08:30 GMT

மெட்ராஸ் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பேட்டி அளித்த அமைச்சர் மா. சுப்ரமணியன், அருகில் அமைச்சர் சேகர் பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.

சென்னை சென்ட்ரல் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு,மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மா. சுப்ரமணியன் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய பின்னர் மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்.

உலக அளவில் தலைசிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளில் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 64 வது இடத்தில் உள்ளது பெருமை அளிக்கிறது என்றும்,

ராஜிவ் காந்தி அரசு மறுத்துவமனையில் கொரோன தொற்றல் பாதிக்கப்பட்ட 55052 பேருக்கு மருத்துவ சிகிசை அளித்து உள்ளனர் என்றும்,

2500 மேற்பட்ட படுகைகள் உள்ள இந்த மருத்துவமனையில் தற்போது 115 நபர்கள் மட்டும் கொரோனவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும்,

கருபுஞ்சைக்கு தமிழகத்தில் மட்டும் 3697 பாதிப்பு அடைந்த நிலையில் 778 பேர் வரை இந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து உள்ளனர்.

ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹரஸ்வர்தன் அவர்களை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார் அதனால் புதிதாக பதவியேற்ற சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கோரியுள்ளோம்

டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க சென்னை பகுதியில் உள்ள எல்லா நீர்நிலைகளிலும் ட்ரோன் வழியாக கொசு மருந்து தெளிக்கும் நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது

லாம்டா வகை வைரஸ் பாதிப்பு உலகளவில் ஏற்பட்டாலும் எந்த வகை வைரஸ் நமது நாட்டிற்குள் நுழையாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

தற்போது 900 மெட்ரிக் டன் ஆக்ஸிசன் ஒரு நாள் உற்பத்தியாக உள்ளது. எனவே மூன்றாவது அலை பரவினாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

தமிழகத்தில் தற்போது வரை ஒரு கோடியே 59 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும்,இன்று தமிழகத்தில் 1.74 லட்சம் தடுப்பூசிகள் கை இருப்பில் உள்ளது எனவும்,

கொரோன இன்னும் முற்றிலும் சரியாகாத நிலையிலும் மூன்றாவது அலை அச்சுறுத்தல் உள்ள நிலையிலும் ஆக்சிசன் உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது பற்றி தற்போது யோசிக்க இயலாது என கூறினார்.

Tags:    

Similar News