சசிகலாவும், டிடிவி தினகரனும் அதிமுக தொடர்பு இல்லாதவர்கள்- ஜெயக்குமார்
சசிகலாவும், தினகரனும் அதிமுக தொடர்பு இல்லாதவர்கள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தினகரன் நேற்று அதிமுக மீட்டெடுப்பதற்கான பணிகளை அம்மா மக்கள் முன்னேற்றம் தொடர்ந்து செய்யும் என்று சொல்லி இருந்தது குறித்து நிருபர்கள் கேட்டபோது, தினகரனும், சசிகலாவும் அதிமுகவுக்கு தொடர்பில்லாதவர்கள். கட்சியை மீட்டு எடுப்பதெல்லாம் நடக்குமா? கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்படுவதெல்லாம் நடக்கவே நடக்காது என்று கூறினார்