முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ராயபுரம் எம்எல்ஏ மூர்த்தி கண்டனம்

கடந்த ஓராண்டில் மட்டும் ராயபுரம் தொகுதியில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன;

Update: 2022-08-28 01:00 GMT

ராயபுரம் தொகுதி எம்எல்ஏ மூர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் (பைல் படம்)

வரம்பு மீறி தொடர்ந்து பொய் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என ராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ ட்ரீம் ஆர் மூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது, கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சட்டப்பேரவை உறுப்பினராக ஜெயக்குமார் தான் இருப்பதாக மக்கள் தொடர்ந்து நம்புவதாகவும், தற்போதைய எம்எல்ஏ மூர்த்தி சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொள்கிறார். மேலும் அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை என தான் வகித்த பதவிகளுக்கு தகுதி இல்லாத வார்த்தைகளில் விமர்சனம் செய்துள்ளார் . தொடர்ந்து இத்தொகுதியில் உறுப்பினராக இருந்து வந்த ஜெயக்குமார் இத்தொகுதியில் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் பாடுபடவில்லை.தனது சொந்த நலனை கருத்தில் கொண்டே தொடர்ந்து தன்னை வளப்படுத்திக் கொண்டார். மூலக்கொத்தளம் மயானத்தில் எவ்வித அனுமதியும் இன்றி வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை கட்டினார் என்பதை தவிர வேறு எந்த சாதனையையும் ஜெயக்குமார் ஏற்படுத்தவில்லை .

கடந்த ஓராண்டில் அரசு ஸ்டான்லி, ஆர் எஸ் ஆர் மருத்துவமனைகள் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக நவீன பயப்படுத்தப்பட்டுள்ளது.அரசு தொழிற்பயிற்சி மையம் நவீன ப்படுத்தப்பட்டுள்ளது கடந்த ஓராண்டில் மட்டும் ராயபுரம் தொகுதியில் ரூபாய் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் என்ற முறையில் இதுவரை சுமார் 6000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று உள்ளேன். எனவே ஒரு சட்டப்பேரவை உறுப்பினரை கொச்சைப்படுத்தும் வகையில் தரமற்ற முறையில் விமர்சனம் செய்யும் பழக்கத்தை ஜெயக்குமார் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார் எம்எல்ஏ மூர்த்தி

Tags:    

Similar News