வரலாற்றில் முதன்முறையாக பிளஸ் 2 மதிப்பெண்கள் தசம மதிப்பில் வெளியீடு
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம மதிப்பில் வெளியிடப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களை தசம மதிப்பில் வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிபிஐ வளாகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்கள் 2 தசம இலக்கத்தில் மிக துல்லியமாக வழங்கப்படுகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,16,473 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண் பட்டியலை பெறலாம்.
பிளஸ்2 தேர்வு முடிவுகள் மாணவர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிளஸ்2பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை.
மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் வருகிற 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் கொரோனா பரவலைப் பொறுத்து தேர்வு நடைபெறும்.
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழும் விரைவில் வெளியிடப்படும். 551 முதல் 600 மதிப்பெண்கள் 30 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துள்ளனர். பள்ளிக்கு வராத, தனித்தேர்வர்களுக்கு தேர்வு நடைபெறும். 1656 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.11ம் வகுப்பில் அரியர் வைத்த 33,557 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
பிளஸ்2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை : 3,80,500+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியர் எண்ணிக்கை : 4,35,973
பொதுப்பாடப்பிரிவு : 7,64,593
தொழிற்பாடப்பிரிவு : 51,880
தேர்ச்சி பெற்றவர்கள் : 100%
அறிவியல் பாடப்பிரிவில் 30,600 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடப்பிரிவில் 8,909 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தொழிற்கல்வி பாடப்பிரிவில் 136 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் 35 மாணவர்கள் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர்.