சென்னை காவல்துறை சார்பில் புதிய கொரோனா நடைமுறைகள்
சென்னை மாநகர காவல்துறையின் சார்பில் புதிய கொரோனா நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது.இதனால், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியாளர் விஜயராணி ஆகியோர் தலைமையில் சென்னையில் உள்ள அனைத்து வியாபார சங்க நிர்வாகிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்கள், மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் நுழைவாயில் மற்றும் வெளி வாயில்களில் கூடாரங்கள் அமைத்து உடல் பரிசோதனை செய்யும் கருவி கிருமிநாசினி மற்றும் முக கவசம் உள்ளிட்டவற்றை வைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல் கோபுரங்கள் அமைக்கப்பட்டும் மற்றும் ஒலிபெருக்கியின் மூலமாகவும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் ட்ரோன் கேமரா உதவியுடன் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜூவால், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தலைமையில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுக்கும் விதமாக தன்னார்வலர்களும் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.