தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்கச் செல்லும் அணியினரை வாழ்த்திய அமைச்சர்

தேசிய ஹாக்கி போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்களை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்தி வழியனுப்பினார்.

Update: 2021-12-11 02:25 GMT

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்.

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடைபெறவுள்ள பதினோராவது ஹாக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் செல்லும் வீரர்களை வாழ்த்தி வீரர்களுக்கு தேவையான உடமைகளை விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.

18 நபர்கள் கொண்ட தமிழக ஹாக்கி அணியினருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை அமைச்சர் வழங்கினார் 18 பேர் கொண்ட தமிழக ஹாக்கி அணியின் கேப்டனாக சதீஷ் செயல்பட உள்ளார்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டினை யூனிட் ஆப் தமிழ்நாடு அமைப்பின் தலைவர் சேகர் J மனோகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்

புனேவில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டியில் பங்கேற்ற செல்லும் வீரர்களை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினார். இந்திய அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக வீரர்கள் இடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது எனவே தான் வீரர்களுக்கு சரியான பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது அவர்களில் 18 பேர் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஹாக்கி வீரர்கள்  பயணம், வெற்றி பயணமாக இருக்க வேண்டுமென வாழ்த்துக்கள் கூறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் அனைத்து விதமான விளையாட்டு வீரர்களையும் நேர்மையாக தேர்வு செய்யப்படுகின்றனர் மாவட்டங்களில் உள்ள விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

உலக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற தமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்பட்டுள்ளன சிலம்பம் போட்டிகளை பள்ளி அளவில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விளையாட்டு அரங்கம்25 தொகுதிகளில் உள்ளன 209 தொகுதிகளில் நிலம் தேர்வு செய்யப்பட்டவுடன் உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

2022 ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிக்கு தமிழக வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News