ஊரடங்கு தளர்வுகள் ரத்து : சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை மிகுந்த எச்சரிக்கையோடு பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2021-07-04 06:35 GMT

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி (பைல் படம்)

சென்னை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை மிகுந்த எச்சரிக்கையோடு பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நீடிக்கப்பட்ட ஊரடங்கானது நாளை ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜவுளி, நகை கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும்.

கடற்கரையில் தடுப்புகள் அமைத்து தொடர்ந்து கண்காணிக்கப்படும். மக்கள் கூட்டமாக வருவதை தவிர்க்க கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News