சென்னை: சமூக இடைவெளியின்றி மார்க்கெட்டில் குவியும் மக்கள் கூட்டம்!
இன்று ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் சென்னை மார்க்கெட்டுகளில் சமூக இடைவெளி இன்றி மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர்.;
தமிழகம் முழுவதும் நாளை முதல் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் நேற்று மதியமும், இன்று முழுவதும் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டது.
இதனை பயன்படுத்திய பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்பதற்காக சென்னையில் உள்ள மார்க்கெட்டுகளில் குவிந்து வருகின்றனர். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறந்துள்ளது. சென்னை கொத்தவால்சாவடியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தவில்லை.
கொரோனா இல்லாததுபோல் சாலைகளில் வாகனங்கள் படையெடுத்த வண்ணம் உள்ளன. மக்கள் அங்கும் இங்குமாக கூட்டம் கூட்டமாக அலைந்துகொண்டிருக்கின்றனர்.
வெளிமாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.