சோளிங்கர் யோகநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
சோளிங்கர் யோகநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்;
சோளிங்கர் யோகநரசிம்மர் திருக்கோயில் ரோப்கார் பணிகள் குறித்து ஆலோசனைக்கூட்டம்
சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையகரத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயில் ரூ. 9.30 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கம்பிவட ஊர்திப் பணிகளை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.
கம்பிவட ஊர்திப் பணிகளை விரைந்து முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கம்பிவட ஊர்தி அமைவிடத்தில் பக்தர்களின் அடிப்படை வசதி மேற்கொள்ளவும் திருக்கோயில் வரும் பக்தர்களுக்கு வசதிகள் மேற்கொள்ளவும் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
கைத்தறித்துறை அமைச்சர் காந்தி , எம்எல்ஏக்கள் மோகன், நந்தகுமார், எழிலரசன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திருமகள், வேலூர் மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, இணை ஆணையர்கள் ஹரிப்பிரியா, வான்மதி, கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் செயல் அலுவலர் ஜெயா உட்பட பலர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்