மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வயது உயர்வு...புதிய அரசாணை வெளியீடு
தமிழக மின்வாரிய ஊழியர்களின் ஓய்வு வரம்பை 60 ஆக உயர்த்தி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் போலவே தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.