ஊரடங்கிலும் அம்மா உணவகங்களில் 3 வேளை உணவு

Update: 2021-04-27 05:12 GMT

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி சென்னையில் 407அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது.

இந்த உணவகங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நாளிலும் ஏழை எளிய மக்கள் வரிசையில் நின்று தங்களுக்கான மூன்று வேலை உணவினையும் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இதற்கு முந்தைய ஊரடங்கில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனால் தற்போதும் அவ்வாறு இலவச உணவு வழங்கி இருக்கலாம் என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். 

Tags:    

Similar News