நேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் விற்பனை தொடங்கியது

Update: 2021-05-15 05:32 GMT

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் கொரோனா நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்தான ரெம்டெசிவர் விற்பனை இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.

முன்னதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த சில நாட்களாக ரெம்டெசிவர் மருந்து விற்பனைச் செய்யப்பட்டு வந்தது. அங்கு ரெம்டெசிவர் மருந்தினை வாங்க ஏராளமான பொது மக்கள் குவிந்தனர். இதனால் மருத்துவமனையில் கொரோனா பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டதால் பெரியமேடு பகுதியில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் ரெம்டெசிவர் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த அறிவிப்பின் படி இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை ரெம்டெசிவர் மருந்து விற்பனை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் உள்ள ஆண்கள் விடுதியில் விற்பனை நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News