'தம்பி ஸ்டாலின் வாழ்த்துக்கள்', பிரதமர் மோடி வாழ்த்து
முதல்வராக பதவி ஏற்றுக்கொண்ட ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
தமிழக சட்டப்பேரவையில் 133உறுப்பினா்களின் ஆதரவுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு உறுதிமொழியும் செய்துவைத்தார். அதைத்தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.