ஆன்-லைன்' வகுப்பு வாட்ஸ்- ஆப்' குழுவில் ஆபாச படம் - போலீசார் விசாரணை
பள்ளி மாணவர்களின் 'ஆன்-லைன்' வகுப்பிற்கான, 'வாட்ஸ்- ஆப்' குழுவில், ஆபாச படம் பதிவேற்றம் செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.;
பள்ளி மாணவர்களின் 'ஆன்-லைன்' வகுப்பிற்கான, 'வாட்ஸ்- ஆப்' குழுவில், ஆபாச படம் பதிவேற்றம் செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.
பாலவாக்கம், ஆதிதிராவிடர் நலப்பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஜூம்' செயலி மூலம் ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. வீட்டுப்பாடங்கள் குறித்த தகவல்களை தெரியப்படுத்த, பள்ளி சார்பில் வாட்ஸ்- ஆப் குழு ஒன்று செயல்படுகிறது. அந்த குழுவில்,திடீரென ஆபாசபடம் பதிவேற்றம் செய்யப்பட்டது. இது, பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது தொடர்பாக பள்ளி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.ஆபாச படம் பதிவேற்றம் செய்தது, பள்ளி மாணவர் உறவினர் மதுராந்தகத்தைச் சேர்ந்த பசுபதி, 28, என்பதும், அவர் உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோது பதிவேற்றம் செய்ததும் தெரிய வந்தது.இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்தனர்.