சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.;
சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, காவல்துறை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்து பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி காரணமாகத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில், சங்கர் ஜிவால் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து குணமான பிறகு, தற்போது பணியைத் தொடர உள்ளார். அதற்கு முன்பாக, இன்று முதல்வரை சந்தித்து பதவி உயர்வுக்காக வாழ்த்துப் பெற்றுள்ளார்.