சென்னை - கோவை ‘வந்தே பாரத்’ ரயில்: கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர்

சென்னை - கோவை ‘வந்தே பாரத்’ ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்;

Update: 2023-04-08 11:00 GMT

சென்னை கோவை வந்தே பாரத் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்த பிரதமர் 

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை - கோவை இடையேயான ‘வந்தே பாரத்’ ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்பட பலர் உடன் இருந்தனர்

தமிழகத்துக்கு உள்ளேயே இயக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில் இதுதான் ஆகும். கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்த ரயில் வந்து சேரும். திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

அதேபோல், மறுமார்க்கத்தில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவை இடையிலான 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும். இரவு 8.15 மணிக்கு இந்த ரயில் கோவை சென்றடையும். வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும்.

புதன்கிழமை மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது. தற்போது வெளியாகியிருக்கும் அட்டவணைப்படி இந்த ரயில் கோவையில் இருந்து சென்னைக்கு 5 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும். மொத்தம் 8 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி, சொகுசான இருக்கைகள் என பயணிகள் விமான பயணங்களுக்கு நிகரான சொகுசு வசதிகளை உணர முடியும் என்று அதிகாரிகள் கூறினர்.

8 பெட்டிகளில் 536 இருக்கைகள் கொண்டதாக இந்த ரயில் இருக்கும். பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ரயில் பெட்டியின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

வந்தே பாரத் ரெயில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பயணிகள் 5 மணி 50 நிமிடத்தில் சென்னையில் இருந்து கோவை சென்றடைய முடியும். இதேபோல, சென்னை - பெங்களூர் வரையிலான சதாப்தி ரெயிலினின் வேகத்தையும் ஜீன் மாதம் முதல் அதிகரிக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதேபோல, இந்த வருடத்தில் 44 ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News