பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன், மாணவர் சேர்க்கை நடத்தினால், நடவடிக்கை எடுக்கப்படும்: உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.;
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்
சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 31ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அப்போதுதான் மதிப்பெண் பட்டியலும் வெளிவரும் என தெரிவித்தார். அதேபோல தமிழகத்திலும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகிறது.
எனவே தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்.
தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக நுழைவுத்தேர்வு வழியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தினால் அது செல்லாது எனவும் அவை ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார். அவ்வாறு நடந்தால் அந்த கல்லூரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் எந்தவித விதியும் திருத்தப்படவில்லை எனவும், வழக்கம்போல மாணவர் சேர்க்கைகள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நடைபெறும் என தெரிவித்தார்.
தற்போது கொரோனா காலமென்பதால் கல்லூரிகளுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதிக்கக் கூடாது என்பது தான் அரசின் நிலைப்பாடு எனவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.