ரஜினிக்கு பால்கே விருது: மத்திய அரசு அறிவுப்பு..!
ரஜினி காந்த்துக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான தாதா சாஹிப் பால்கே விருதினை மத்திய அரசு அறிவித்தது.;
சினிமா துறையில் சாதனை படைக்கிறவர்களுக்கு இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதுகளில் ஓன்று தாதா சாஹிப் பால்கே விருது.. இந்த ஆண்டுக்கான தாதா சாஹிப் பால்கே விருது நடிகர் ரஜினி காந்துக்கு வழங்கப்படுவதாக இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் விருதுக்கு ரஜினி தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து டிவிட்டரில் தகவல் தெரிவித்த பிரகாஷ் ஜவடேகர் இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு இந்த விருதினை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.