தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: 6 வாரங்களில் முடிவெடுக்க ஐகோர்ட் ஆணை
தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தில், தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்படவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக 6 வாரங்களில் முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.தனியார் கல்வி நிறுவன சங்க நிர்வாகி பழனியப்பன் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் சார்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தில், தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டும் என கூறப்படவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.